பாரிலுளோர் சுண்ணாம்பைப் பாறைக்கல் என்றாலும்
நீரிலது தானாக நீர்த்துவிடும். – தேரில்
கலையாதாய்த் தோன்றும் குணமுடையோர் கோபம்
நிலையாது நீத்து விடும்.
ஈற்றடிக்கு எழுதியது: tamilauthors.com Minnithaz.
7.1.2019.
மாயக் காரன் அவனொருவன் - இங்கு
மந்திர வடிவில் இருக்கின்றான். பாயும் மனதை ஈர்க்கின்றான். பற்பல வித்தைகள் புரிகின்றான். ஒற்றைச் சின்ன விதைக்குள்ளே - ஒரு உருவிற் பெரிய ஆலமரம் நிற்கை காட்டி மயக்குகிறான். நெஞ்சில் நின்றே இயக்குகிறான். முட்டைக் குள்ளே காணாது - குஞ்சை மூடி வைத்துக் காட்டியவன் முட்டை பறவைக் குள்வைத்து மேலும் விந்தை புரிகின்றான். முட்டை பறவை இவற்றுள்ளே - இங்கு முதலில் வந்தது எதுவென்றால் கெட்டிக் காரன் செயலலவா கேள்விக் கொன்றும் விடையில்லை. எண்ணில் நேரம் மாறாமல் – உள எதுவும் வழியில் விலகாமல் விண்ணில் எத்தனை பந்துகளை வீசிச் சுழலச் செய்துள்ளான்? எண்ணப் பிடிக்குள்: வருகின்றான் – என எண்ணும் போதே மறைகின்றான் கண்ணைக் கட்டிய ஆட்டமிது கைதொட வந்து நிற்பானோ? |
(தரவு கொச்சகக் கலிப்பா)
காலம் வருமெனக் காத்திருந்து- ஓடும் கைகளின் ரேகையைப் பார்த்திருந்தால் கால னழைத்திடு நாளதன்முன்- நீ
கண்டிடல் வெற்றியை சாத்தியமோ?
பின்னொரு நாளினில் நன்மையுண்டு-என்றே பேசிடும் சோசியம் விட்டுவிடு இன்றைய நாளுந்தன் கையிலுண்டு- நீ இன்றே செயல்பட முந்திவிடு. தூங்கி யெழுந்திடத் தாமதமாகிடில்- வானில் தோன்றும் விடிவெள்ளி என்னசெய்யும்? ஏங்கி அழுவதை விட்டுவிட்டு- நீ எழுந்து நடந்திடு வெற்றிகிட்டும். |