வேறு தருந்தகுதி வாயார் அறிவுரைகள்
நூறு தரவருவார் நொந்தகல. – யாரும்
வருமுரைகள் வேண்டார் விரும்பாரோ வாய்ப்பின்
தருபவராய்த் தாமிருந்தால் தான்.
(கருத்து; Vikasa Mantras, VIHE Ramakrishna Math. Hyderabad)
வேறு தருந்தகுதி வாயார் அறிவுரைகள்
நூறு தரவருவார் நொந்தகல. – யாரும்
வருமுரைகள் வேண்டார் விரும்பாரோ வாய்ப்பின்
தருபவராய்த் தாமிருந்தால் தான்.
(கருத்து; Vikasa Mantras, VIHE Ramakrishna Math. Hyderabad)
சிறுவர் உலகம்
குண்டுக் கோலி சுண்டிய
டித்தலும்
குத்திய பம்பரம் சுற்றிட வைத்தலும்
தண்டுக் கில்லி
தட்டிய ளத்தலும்
தாண்டலு மோடலும் தாவியே குதித்தலும்
நொண்டி யடித்தலும்
நூல்பிடித் தாடலும்
நின்று, சிறுவர் நிலையா யமர்ந்துகைக்
கொண்டசெல் பேசியைக்
குணிந்துகண் பார்த்திரு
கைவிர லழுத்தலே ஆட்டமென் றானதே!
.
உடலதன் நலத்தோ டுளநலம்
பேணிட
உறுதுணை யானதென் றொன்றிலை யானதே!.
தொடுதிரைப் பேசியில்
தொலையுருக் காட்சியில்
தரமிலாத் தொடர்கள் வலைவிளை யாட்டுகள்
விடுபட முடியா தீர்ப்பினி
லிவற்றினை
விரும்புநம் சிறுவரை விலக்குத லெங்ஙனம்?
கெடுதலை யுணராக்
கடையரின் செயல்களின்
கொடுமையா லழியுது குழந்தைக ளுலகமே!
அழ. வள்ளியப்பா
நினைவுக் கவியரங்கம். பாரதி கலைக்கழகம். 22.11.2020
கோரிப் பெறுவிருதால் கொள்வர் புகழென்றால்
யாரும் பெரியரென ஆவாரே. – பாரில்
அரியரிவர் என்றே அறிவுடையோர் ஆய்ந்து
பெரியராய்க் கொள்வது கோள்.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. மின்னிதழ். நவம்பர் 2019
வைதல் திருந்த வழிவகுக்கும். பொய்ச்சொற்கள்
பெய்த புகழாற் பயனுண்டோ? – மெய்யில்
நிகழ்போதில் மீண்டு நெறிநிற்றல் வேண்டும்.
புகழ்தலின் வைதலே நன்று.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ். செப். 2019
ஒளியாம லுண்மையை உரைப்பதே நலமென்ற
உறுதியைக் கொண்டு நின்றாய்
உன்வாழ்வை
நூல்செய்து உலகதை உணரவே
உண்மையாய்
எடுத்து வைத்தாய்!
ஒளிவொன் றிலாதபடி வாழ்வதை உண்மையாய்
உன்னிடம் கற்ற பின்னர்
உன்னளவு
இலையெனினும் ஓரளவு முயல்கிறேன்
உண்மையாய்
வாழு கின்றேன்.
எளியரின் நிலைகண் டிரங்கியே
உடைதந்து
இடையாடை
யோடு நின்றாய்!
இனியாரு
மதுசெய்ய இயலாத தாகவென்
இதயத்தி லுயர்ந்து நின்றாய்!
எளிமையைக் கொள்கையாய் ஏற்றிங்கு வாழ்பவர்கள்
எத்தனை
பேர்க ளுண்டு?
என்னாலும்
உன்போல இயலுமோ அதுவென்று
இன்னமும் முயலு கின்றேன்.
ஆற்றினி லோடுநீ ரற்றுலர்ந்த
போதிலும்
ஊற்றுநீர் ஆறுதவ லுண்டன்றோ? – போற்றுவகை
எய்துபொரு ளற்றபினு
மெஞ்சியதில் நற்குணத்தார்
செய்வர் செயற்பா லவை.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ் ஜுலை 2019
அருமை யுடையசெயல் ஆற்றல்பொய் யாமை
பெருமைத் தருக்கில்லாப் பேச்சு – பொருமையுடன்
தன்னில் எளியோரைத் தாங்கு மருங்குணம்
எண்ணும் பெருமை இவை.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 1.6.2019
பொருளே பெரிதாய்ப் புரிபா வமுடன்
புலனின் பநுகர் வதிலார் வமுளன்
அருளிச் செயலை வடவே தமதை
அறவே அறியா துளகீழ் நிலையன்
மனதா லுரையா லுளதே கமதால்
மதிமீ றியகா ரியமே புரியும்
எனதா யிரமா யிரமா னபிழை
எதுவா யினுமே இலையா யருள்வாய்
ஒருசக் கரமும் ஒலிசங் கதுவும்
உடையாய்! அழகே உருவா னவனே!
திருவே தனதாய் உறைமார் பினனே!
தொழுதேன் அடிசேர் கதிதந் தருளே!
உன்னதம்
போய்மறையும் உற்றதுணை விட்டகலும்
பின்னடைவு
கண்டு பிறர்நகைப்பர் – எண்ணி
அழலே
விதியென் றடங்கவும் வைக்கும்
நிழலும்
மிதிக்கும் நிலை.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. Minnithazh 20.5.2019
வண்ணக் கலவையில்
தூரிகை தோய்த்திதை
வானில் வரைந்தவர் யார்?
மண்ணி லதன்நிழல்
நீரில் விழும்படி
மாண்புறச் செய்தது யார்?
\கண்ணைக் கவர்கிற
காட்சிகள் யாவிலும்
காணென நிற்பவன் தான்.
எண்ணத் துறைபவன்
எழில்வடி வானவன்
எங்கும் நிறைந்தவன் தான்.
மின்னிதழ் ஒன்றின்
படக்கவிதைப் போட்டிக்காக எழுதியது.
10.9.2018.
காட்டிப்
பொருமையினைக் காரியங்கள் ஆற்றிடுவார்
போட்டி
தவிர்த்துப் பொருள்சேர்ப்பார். – ஈட்டியதில்
இன்புற்
றிரப்போர்க்கும் ஈந்துவப்பார் பாரிலவர்
துன்புற்று
வாழ்தல் அரிது.
ஈற்றடிக்கு எழுதியது. Tamiauthors.com Minnithazh 18.3.2019
கண்டபடி
கண்மேயும். காதிரண்டும் கேட்காது.
மண்டுதலைக்
கர்வம் மதியழிக்கும். – உண்டாகும்
பொய்யுறவும்
நட்பும் பொழுதழிக்கும். கீழோரின்
கைநிறையக்
காசிருந்தக் கால்.
ஈற்றடிக்கு எழுதியது. Tamil authors.com. Minnithazh 8.5.2019