விண்ணியல் வேதியல் முதலா யுள்ள
எண்ணிலா வகையுள துறைக ளூடே
பெண்ணிலா தொன்றிலை பெருமை மிக்கோர்
நுண்ணறி வுடையராய் நூல்கள் கற்று
மண்ணில் உழைப்பினில் ஒளிரு கின்றார்.
பெண்மையே உலகிதில் அன்பின் தோற்ற
பெண்மையே உயிர்களின் ஜீவ ஊற்று.
பெண்மையாய் விளங்குமோர் சக்தி தெய்வம்.
இன்றவர்க் கினுமுள இன்னல் மாற்றி
பெண்நிலை உயர்த்திப் பெருமை கொள்வமே.
கவிஞர்கள் கலைக்கூடம் முகநூல் பதிவு. 8.3.2025 ஒழுகிசை அகவலோசை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா. மகளிர் தினம்.