மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
சாலைகளின் சந்திப்பில் சங்கடங்கள் தீர்ப்பதற்கு
வேலைசெயும் சிக்னல் விளக்குப்போல் வாழ்விலுமே
துன்பம் தவிர்த்திடத் தோன்றும் அடையாளம்.
நின்று செயல்படலே நன்று
கவிஞர்கள் கலைக்கூடம் முகநூல் குழுமத்தில் தேர்வு பெற்றது.
பொய்யால் புரட்டால் புறப்பேச்சால் புன்சொல்லால்
மெய்யாய் உளதெதுவும் மாறாதே --- செய்வானேன்?
நோகாக்க, சொல்லழுக்கால் நாக்கழுக, வேண்டுவதா?
நாகாக்க என்றும் நயந்து.