கள்ளுண்ணல் பொய்யுரைத்தல் கள்ளத் தனமிவற்றால்
எள்ளத் தகுநிலையை எய்தினோம்
--- கொள்கையெலாம்
சேறுண்டு போனபினர் செய்முழக்கிற் கேதுபொருள்
வீறுகொண்ட பாரதியே வேர்
.செப்டம்பர் 2023 அமுதசுரபி இதழில் வெளியானது.
கள்ளுண்ணல் பொய்யுரைத்தல் கள்ளத் தனமிவற்றால்
எள்ளத் தகுநிலையை எய்தினோம்
--- கொள்கையெலாம்
சேறுண்டு போனபினர் செய்முழக்கிற் கேதுபொருள்
வீறுகொண்ட பாரதியே வேர்
.செப்டம்பர் 2023 அமுதசுரபி இதழில் வெளியானது.
கொண்டுவனம் சேர்த்ததுவும்
கூன்முதுகில் முன்பொருநாள்
உண்டை விடுத்ததுவும்
ஒன்றாமோ? --- எண்ணியொரு
கேட்டை விளைத்தல் கொடுமை.
விளைவறியாச்
சேட்டை சிறுவர் செயல்.
ஈற்றடிக்கு எழுதியது
நாய்க்குணமும் வஞ்ச
நரிக்குறும்பும் கேடுமிகு
பேய்த்தனமும் இன்றேல்
பிறர்பார்த்து -- ‘வாய்த்த
சனியனிது’ என்றுரையார்
சாபமிடார் இங்கு
மனிதனாய் வாழ்வதே மாண்பு