மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
பின்னற் றலைப்பூவும் பட்டுச்சிற் றாடையினிற்
கண்ணைக் கவர்மலர்கள் காண்பவையும் – மின்னலெனத்
தாவிவிளை யாடத் தரைவந்த தேவதையிப்
பூவின்மேல் எத்தனை பூ
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com செப். 2020
முன்னரே எண்ணி முடிக்கும் வழியறிந்து
பின்னர் பெறுபயனும் பார்த்திடுவாய் – இன்னும்
முனைந்து நெறிகளுக்குள் முற்றவும் நின்றே
வினைசெய்ய நாளும் விரும்பு.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Aug.2020