சென்னை
உலகத் திருக்குறள் மையம், குறள் ஞானி, மோகனராசு ஐயாவின் துணைவியார், கு. சாந்தி அம்மையார்
நினைவரங்கம்.
வள்ளுவர்
கோட்டம் 1.6.2019.
குறட்பாக்
கவியரங்கம்.
தலைமை;
முனைவர். திரு. குமரிச்செழியன் அவர்கள்.
பொதுத்
தலைப்பு; ‘ஆளுமைக்கோர் விண்மீன்’
தனித்
தலைப்பு; ‘ஆற்றலாளர்’
மோகன ராசுவெனும்
முன்செலுத்தும் வள்ளுவத்தேர்ப்
பாகனைநீ
நெஞ்சே பணி.
ஆற்றலாளர்
1. பன்முக வாற்றலினைப் பெற்றிருந்த சாந்தியெனும்
பெண்மணிக் கீடார் பகர்.
2, சிற்றூரில்
ஊர்வலங்கள் சென்று குறள்பரப்பப்
பெற்றமன வாற்றல் பெரிது.
3. விதந்து பிறர்போற்ற வேண்டுதிறன் கொண்டே
இதழ்ப்பணிகள் செய்தா ரிவர்.
4. கூட்டங்கள்,
மாநாட்டில் கொள்கை எதிர்நின்றார்
போட்டியிடர் போக்கியமை நன்று.
5. குறள்மைய
மேலாண்மை கொண்டியக்கு மாற்றல்
பிறர்கண்டு போற்றியதைப் பேசு.
6. ஆசிரியர்
மன்றத்தின் ஆய்வுமா நாட்டுரைகள்
பேசியது வெள்ளப் பெருக்கு.
7. நுண்மாண்
நுழைபுலமும் நூலியற்றும் வல்லமையும்
கொண்டுபுகழ் கொண்டாரைக் கூறு.
8. போற்று
முழைப்பும் புரிபணியில் தீவிரமும்
ஆற்று திறமும் அழகு.
9. குறள்வழிநின்
றில்லியக்கிக் காட்டியமை பாரில்
பிறரும்பின் பற்றும் படி.
10. ஆற்றல்
மிகவுடைய அம்மை புரிந்தபணி
போற்றி வணங்கும் புவி.
சாந்தி அம்மையார் பற்றிய, குறள் ஞானியாரின் கருத்தோட்டத்தைக் குறள்நடைப்படுத்தியது;
வீரம் அமைதிக்குள் வீற்றிருக்க வீரத்துள்
ஈரமிருந் தாற்போ லிவர்.
No comments:
Post a Comment