சாப்பிட இனிப்பு மிக
சந்தோஷ மாயணிய,
பூப்போட்ட மேற்சட்டை
போதா திவையென்று
கேப்புசுடத் துப்பாக்கி
கேட்பா னெனவாங்கி
கூப்பிட் டனுப்பியதும்
குதுகலித் தோடிவந்தான்.
வேண்டா மிவையெனக்கு
வெடிக்கின்ற அணுகுண்டு
வேண்டுமெனக் கேட்டதுமே
விதிர்விதித்துத் தடுமாறி
ஆண்டைந்து நிறைவதற்கே
ஐந்தாறு மாதமுள்ள
வாண்டுதந்த அதிர்ச்சியிலே
வாயடைத்துப் போனேன் நான்
பாரதி கலைக்கழகம், அழ. வள்ளியப்பா நினைவுக் கவியரங்கம். நவம்பர் 2014